உலக செய்திகள்

லண்டன் வங்கியில் உள்ள ஐதராபாத் நிஜாம் பணம் யாருக்கு சொந்தம்? : இந்தியா-பாகிஸ்தான் மோதலில் விரைவில் தீர்ப்பு + "||" + Who owns the Hyderabad Nizam Money in the Bank of London? : India-Pakistan conflict soon to be decided

லண்டன் வங்கியில் உள்ள ஐதராபாத் நிஜாம் பணம் யாருக்கு சொந்தம்? : இந்தியா-பாகிஸ்தான் மோதலில் விரைவில் தீர்ப்பு

லண்டன் வங்கியில் உள்ள ஐதராபாத் நிஜாம் பணம் யாருக்கு சொந்தம்? : இந்தியா-பாகிஸ்தான் மோதலில் விரைவில் தீர்ப்பு
லண்டன் வங்கியில் உள்ள ஐதராபாத் நிஜாம் பணம் யாருக்கு சொந்தம் என்ற இந்தியா-பாகிஸ்தான் மோதலில் விரைவில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
லண்டன்,

இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின்போது, தனி சமஸ்தானமாக இருந்த ஐதராபாத்தை இந்தியாவுடன் இணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதை எதிர்கொள்ள பாகிஸ்தான் தரப்பில், நிஜாமுக்கு ஆயுதங்கள் அளிக்கப்பட்டன. அதற்கு பிரதி உபகாரமாக, 1948-ம் ஆண்டு, ஐதராபாத் நிஜாமின் 10 லட்சத்து 800 பவுண்டு பணம், இங்கிலாந்தில் இருந்த பாகிஸ்தான் தூதர் ஹபிப் இப்ராகிம் ரஹிம்தூலாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.


அப்பணம், பாகிஸ்தான் தூதர் பெயரில் லண்டனில் உள்ள நேட்வெஸ்ட் வங்கி கணக்கில் போடப்பட்டது. பின்னாளில், அப்பணத்தை நிஜாம் திரும்பக்கோரினார். பாகிஸ்தான் மறுக்கவே, யார் உரிமையாளர்? என்று தெளிவான பிறகு பணத்தை ஒப்படைப்பதாக வங்கி நிர்வாகம் தெரிவித்தது.

இதுதொடர்பாக லண்டன் கோர்ட்டில் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே பல ஆண்டுகளாக வழக்கு நடந்து வருகிறது. நிஜாமின் வாரிசுகள், இந்திய அரசுடன் கைகோர்த்து வழக்கை நடத்தி வருகிறார்கள்.

கடந்த 2 வாரங்களாக இறுதிக்கட்ட விசாரணை நடந்தது. இதையடுத்து, இன்னும் 6 வாரங்களில் தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லண்டன் வங்கியில் உள்ள பணம், தற்போது 3 கோடியே 50 லட்சம் பவுண்டுகளாக (ரூ.315 கோடி) பெருகி உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. ஆரணி அருகே, கோவில் பூட்டு உடைக்கப்பட்டு உண்டியல் பணம், வேல் திருட்டு
ஆரணி அருகே கோவில் பூட்டு உடைக்கப்பட்டு வேல், உண்டியல் பணத்தை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
2. மல்லசமுத்திரம் அருகே, அடுத்தடுத்து 3 வீடுகளில் 15½ பவுன் நகை, ரூ.1½ லட்சம் திருட்டு
மல்லசமுத்திரம் அருகே, அடுத்தடுத்து 3 வீடுகளில் 15½ பவுன் நகை, ரூ.1½ லட்சம் திருட்டு போனது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
3. மராட்டியத்தில் தேர்தல் நடத்தை விதி அமல் ரூ.43¾ கோடி தங்கம், பணம், மதுபானம் பறிமுதல் தேர்தல் அதிகாரி தகவல்
மராட்டியத்தில் தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்தநாள் முதல் ரூ.43¾ கோடி தங்கம், பணம், மதுபானம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி கூறினார்.
4. லண்டன் வங்கியில் இருக்கும் ரூ.300 கோடி இந்தியாவுக்கே சொந்தம் - இங்கிலாந்து கோர்ட்டு அதிரடி தீர்ப்பு
லண்டன் வங்கியில் இருக்கும் ஐதராபாத் நிஜாமின் சுமார் ரூ.300 கோடி இந்தியாவுக்கே சொந்தம் என இங்கிலாந்து கோர்ட்டு அதிரடியாக தீர்ப்பு வழங்கியது.
5. கொள்ளையரிடம் இருந்து மீட்கப்பட்ட நகை, பணம்; உரியவர்களிடம் ஒப்படைப்பு
காரைக்குடியில் கொள்ளைபோன நகைகள், பணம் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.