பாகிஸ்தானில் தலீபான்கள் தற்கொலைப்படை தாக்குதல்: போலீஸ் ஒருவர் பலி


பாகிஸ்தானில் தலீபான்கள் தற்கொலைப்படை தாக்குதல்: போலீஸ் ஒருவர் பலி
x
தினத்தந்தி 26 Jun 2019 2:05 PM IST (Updated: 26 Jun 2019 2:05 PM IST)
t-max-icont-min-icon

பாகிஸ்தானில் தலீபான்கள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் போலீசார் ஒருவர் பலியானார்.

இஸ்லமாபாத்,

பாகிஸ்தானின் இயற்கை வளம் மிகுந்த மாகாணம் பலுசிஸ்தான்.  இங்கு பிரிவினைவாதிகளுக்கும் பாகிஸ்தான் ராணுவத்துக்கும் நீண்ட காலமாக மோதல் நிலவி வருகிறது. 

இதனால், அவ்வப்போது அங்கு தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில்,  பலுசிஸ்தானில் உள்ள லோலோரி நகரில் உள்ல காவல் நிலையத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். 

இதில் ஒரு போலீஸார் கொல்லப்பட்டார். மேலும் தாக்குதல் நடத்திய  மூன்று பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். போலீஸார் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தத் தாக்குதகுக்கு தலிபான்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர். 
1 More update

Next Story