காஷ்மீர் குறித்து சர்ச்சை பதிவு: பாகிஸ்தான் அதிபருக்கு டுவிட்டர் நிறுவனம் நோட்டீஸ்


காஷ்மீர் குறித்து சர்ச்சை பதிவு: பாகிஸ்தான் அதிபருக்கு டுவிட்டர் நிறுவனம் நோட்டீஸ்
x
தினத்தந்தி 27 Aug 2019 2:14 AM GMT (Updated: 27 Aug 2019 2:14 AM GMT)

காஷ்மீர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்ட பாகிஸ்தான் அதிபருக்கு டுவிட்டர் நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இஸ்லமாபாத்,

ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த 5-ஆம் தேதி ரத்து செய்தது. இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஜம்மு காஷ்மீர் விவகாரம் இந்தியாவின் உள்விவகாரம் என்று இந்தியா திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராக சர்வதேச நாடுகளின் ஆதரவைப் பெற முயன்ற பாகிஸ்தானின் திட்டம் தோல்வியில் முடிந்தது. 

இந்நிலையில், சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதற்கு எதிராக காஷ்மீரில் போராட்டம் நடைபெறுவது போன்ற வீடியோவை, பாகிஸ்தான் அதிபர் ஆரிப் அல்வி தனது டுவிட்டர்  பக்கத்தில் அண்மையில் பதிவிட்டிருந்தார். 
இந்தப் பதிவு அவதூறு பரப்பும் வகையில் உள்ளதாக அவருக்கு  டுவிட்டர் நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

இந்த நோட்டீஸை டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த அந்நாட்டின் மனித உரிமைகள் அமைச்சர் சிரீன் மஸாரி, டுவிட்டர் நிறுவனத்தின் நோட்டீஸ் தவறான எடுத்துக்காட்டாகவும், கேலிக்குறியதாகவும் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.


Next Story