இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே இன்று இந்தியா வருகை


இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே இன்று இந்தியா வருகை
x
தினத்தந்தி 28 Nov 2019 2:49 AM GMT (Updated: 28 Nov 2019 2:49 AM GMT)

3 நாள்கள் சுற்றுப்பயணமாக இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே இன்று இந்தியா வருகை தருகிறார்.

கொழும்பு,

இலங்கையில் சமீபத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றார். இதையடுத்து, கோத்தபய ராஜபக்சேவுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, இந்தியா வருமாறு அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை ஏற்று, 3 நாட்கள் அரசு முறைப்பயணமாக கோத்தபய ராஜபக்சே இன்று இந்தியா வருகை தருகிறார். 

தனது இந்திய பயணத்தின் போது, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து கோத்தபய ராஜபக்சே  முக்கிய ஆலோசனை நடத்துவார் எனத் தெரிகிறது. வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரையும், இலங்கை அதிபர் சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளார். 

இதனிடையே கோத்தபய ராஜபக்சவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து டெல்லியில், மதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. 


Next Story