ரஷ்யாவில் 1 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்புகள்

ரஷ்யாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 1 லட்சத்தை நெருங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மாஸ்கோ,
உலகம் முழுவதும் 31 லட்சத்து 39 ஆயிரத்து 471 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு உலகம் முழுவதும் இதுவரை 2 லட்சத்து 18 ஆயிரத்து 024 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவில் கொரோனா வைரசால் 10 லட்சத்து 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அங்கு கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 59 ஆயிரத்து 266 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் ரஷ்யாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 5,841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கி உள்ளது. மேலும் ரஷ்யாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 108 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலியாகியுள்ளனர். இதன்மூலம் அங்கு கொரோனாவுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 972 ஆக உயர்ந்துள்ளது.
உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் ரஷ்யா 8-வது இடத்தில் உள்ளது. ரஷ்யாவில் கொரோனா வைரசால் 99,399 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 10,286 பேர் மட்டுமே குணமாகி உள்ளனர்.
Related Tags :
Next Story






