கொரோனா தாக்கம் எதிரொலி: ஸ்பெயினில் தோட்டத்துடன் அமைந்த வீடுகளின் மதிப்பு பல மடங்கு உயர்வு


கொரோனா தாக்கம் எதிரொலி: ஸ்பெயினில் தோட்டத்துடன் அமைந்த வீடுகளின் மதிப்பு பல மடங்கு உயர்வு
x
தினத்தந்தி 29 April 2020 9:45 PM GMT (Updated: 29 April 2020 9:45 PM GMT)

கொரோனா தாக்கத்தின் எதிரொலியால் ஸ்பெயினில் தோட்டத்துடன் அமைந்த வீடுகளின் மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது.

மாட்ரிட், 

ஸ்பெயின் நாட்டை கொரோனா கடுமையாக தாக்கி பெருமளவில் உயிர்ச் சேதத்தை ஏற்படுத்திவிட்டது. ஊரடங்கால் பல வாரங்களாக வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கும் மக்கள், ‘நம்மால் வெளியே சுதந்திரமாக நடமாட முடியவில்லையே?’ என்று ஏங்கி தவிக்கின்றனர். குறிப்பாக, நகர்ப்புறங்களில் வசிப்போர் ஊரடங்கால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக உணர்கிறார்கள். 

ஏனென்றால் தலைநகர் மாட்ரிட் மற்றும் பார்சிலோனா, வாலென்சியா, செவில்லா உள்ளிட்ட பல நகரங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள்தான் அதிகம். இதுபோன்ற பல குடியிருப்புகளில் பால்கனி கூட கிடையாது. இதனால் நெருக்கடியான காலகட்டத்தில் வீடுகளுக்குள் அடைபட்டு கிடப்பதை பெரும்பாலான பணக்காரர்கள் விரும்பவில்லை. 

இவர்களின் பார்வை தற்போது தோட்டத்துடன் அமைந்துள்ள தனி வீடுகள் மீது விழுந்துள்ளது. இதனால் இந்த வீடுகளின் மதிப்பு முக்கிய நகரங்களில் 25 சதவீதம் வரை அதிகரித்து இருக்கிறது. கொரோனாவின் தாக்கம் முற்றிலும் ஓய்ந்த பிறகும் இவற்றின் மதிப்பு இன்னும் உயரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் அடுக்குமாடி வீடுகளின் தேவை 21 சதவீதம் குறைந்ததுடன் விலைமதிப்பும் 10 சதவீதம் வரை சரிவு கண்டுள்ளது.

Next Story