ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,632 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

ரஷ்யாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 43 லட்சத்தைக் கடந்துள்ளது.
ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,632 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
Published on

மாஸ்கோ,

உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் ரஷ்யா 5-வது இடத்தில் உள்ளது. இந்நிலையில் ரஷ்ய சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, அங்கு கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 8,632 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 47,02,101 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்றுக்கு மேலும் 389 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 582 ஆக உயர்ந்துள்ளது. ரஷ்யாவில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து 43,26,780 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 2,69,739 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக ரஷ்ய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com