ஆப்கானிஸ்தான் விவகாரம்: ரஷியா தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை - அமெரிக்கா அறிவிப்பு


ஆப்கானிஸ்தான் விவகாரம்: ரஷியா தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை - அமெரிக்கா அறிவிப்பு
x
தினத்தந்தி 18 Oct 2021 7:48 PM GMT (Updated: 18 Oct 2021 7:48 PM GMT)

ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக ரஷிய தலைமையில் நடைபெற உள்ள கூட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.

வாஷிங்டன்,

ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளின் ஆட்சி நடைபெற்று வருகிறது. தலீபான்களின் ஆட்சியை பல நாடுகள் அங்கீகரிக்கவில்லை. மேலும், ஆப்கானிஸ்தானுக்கு வழங்கி வந்த உதவிகளையும் பல நாடுகளும், அமைப்புகளும் நிறுத்தியுள்ளன.

இதற்கிடையில், ஆப்கானிஸ்தானில் தற்போதுள்ள சூழ்நிலை, ஆட்சி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்க ரஷியா தலைமையில் நாளை (அக்.19) சிறப்பு கூட்டம் நடைபெற உள்ளது.

ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற உள்ள இந்த கூட்டத்தில் ஆப்கானிஸ்தான் தரப்பில் தலீபான்களின் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். இந்தியா, பாகிஸ்தான், ஈரான் உள்ளிட்ட நாடுகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கும்படி அமெரிக்காவுக்கு ரஷியா அழைப்பு விடுத்தது.

இந்நிலையில், ரஷியாவின் அழைப்பை அமெரிக்கா நிராகரித்துள்ளது. அதன்படி, ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக ரஷியா தலைமையில் மாஸ்கோவில் நாளை நடைபெற உள்ள கூட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.   

Next Story