பாகிஸ்தானில் சாலை விபத்தில் 30 பேர் பலி; 15 பேர் காயம்


பாகிஸ்தானில் சாலை விபத்தில் 30 பேர் பலி; 15 பேர் காயம்
x

பாகிஸ்தானில் சாலை விபத்தில் பயணிகள் பேருந்தும், காரும் பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 30 பேர் பலியானார்கள். 15 பேர் காயம் அடைந்தனர்.



கராச்சி,


பாகிஸ்தான் நாட்டில் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் கோஹிஸ்தான் மாவட்டத்தில் காரகோரம் நெடுஞ்சாலையில் பயணிகள் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் கில்கித் பல்திஸ்தானில் இருந்து ராவல்பிண்டி நோக்கி சென்றுள்ளது. இதில், எதிர் திசையில் வந்து கொண்டிருந்த கார் ஒன்றின் மீது, கில்கித் பல்திஸ்தானின் சில்லாஸ் என்ற பகுதியருகே பஸ் மோதி விபத்திற்குள்ளானது.

இந்த சம்பவத்தில், மோதிய வேகத்தில் பஸ் மற்றும் கார் அருகேயிருந்த செங்குத்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்துள்ளது.

இதில், 30 பேர் உயிரிழந்து உள்ளனர். 15 பேர் காயம் அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்து போலீசார் மற்றும் மீட்பு படையினர் உடனடியாக சென்றனர்.

எனினும், இருள் சூழ்ந்த காணப்பட்ட நிலையில் மீட்பு பணியில் சிரமங்கள் ஏற்பட்டு உள்ளன என மீட்பு குழுவினர் தெரிவித்தனர். அதிபர் ஆரிப் ஆல்வி உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து உள்ளார். பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பும் வருத்தங்களை தெரிவித்து உள்ளார்.

கடந்த ஜனவரி 29-ந்தேதி பாகிஸ்தானின் பலூசிஸ்தானில் செங்குத்து பள்ளத்தாக்கு பகுதியில் பயணிகள் பஸ் ஒன்று கவிழ்ந்ததில் 41 பேர் உயிரிழந்தனர்.


Next Story