பாகிஸ்தான் வெள்ள பாதிப்பு: 57 லட்சம் மக்கள் உணவு நெருக்கடியை எதிர்கொள்வார்கள்- ஐ.நா சபை


பாகிஸ்தான் வெள்ள பாதிப்பு: 57 லட்சம் மக்கள் உணவு நெருக்கடியை எதிர்கொள்வார்கள்- ஐ.நா சபை
x

Image Courtesy: AFP 

பாகிஸ்தானில் வெள்ளப்பெருக்கால் 3 கோடியே 30 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் நாட்டில் கடந்த ஜூன் மாதம் பருவமழை தொடங்கியது. பல நாட்கள் நீடித்த மழையால் நாடு முழுவதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஒட்டுமொத்த நாட்டில் 3-ல் 1 பங்கு தண்ணீரில் மூழ்கியது இந்த வெள்ளப்பெருக்கால் 3 கோடியே 30 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டனர். அங்கு வெள்ளத்துக்கு பலியானோரின் எண்ணிக்கை 1,693 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது அங்கு மழை குறைந்து வெள்ளம் வடியத்தொடங்கி மெதுவாக இயல்புநிலை திரும்பி வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 57 லட்சம் மக்கள் உணவு நெருக்கடியை எதிர்கொள்வார்கள் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்பு அமைப்பு வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில், "தற்போதைய வெள்ளம் பாகிஸ்தானில் உணவுப் பாதுகாப்பின்மையை அதிகரிக்கும். வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள 57 லட்சம் மக்கள் செப்டம்பர் முதல் நவம்பர் வரை உணவு நெருக்கடியை எதிர்கொள்வார்கள்" என தெரிவித்துள்ளது.


Next Story