எங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு இஸ்லாமிய மதக்கடவுள் 'அல்லா' தான் காரணம் - பாக். நிதி மந்திரி

எங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு இஸ்லாமிய மதக்கடவுள் ‘அல்லா’ தான் காரணம் என்று பாகிஸ்தான் நிதி மந்திரி கூறினார்.
எங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு இஸ்லாமிய மதக்கடவுள் 'அல்லா' தான் காரணம் - பாக். நிதி மந்திரி
Published on

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது. இதன் காரணமாக உணவுப்பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிந்துள்ளது. ஒரு அமெரிக்க டாலர் பாகிஸ்தான் ரூபாயில் 262.6 ரூபாயாக உள்ளது.

ரூபாயின் வீழ்ச்சி பாகிஸ்தானின் பொருளாதாரத்தை மேலும் பின்நோக்கி இழுத்து சென்றுள்ளது. இதன் காரணமாக உலக வங்கி உள்பட பல்வேறு சர்வதேச அமைப்புகளிடம் பாகிஸ்தான் கடன் வாங்க முயற்சித்து வருகிறது.

இந்நிலையில், எங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு இஸ்லாமிய மதக்கடவுள் 'அல்லா' தான் காரணம் என்று பாகிஸ்தான் நிதி மந்திரி இஷக்யூ தர் கூறினார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், பாகிஸ்தானை இஸ்லாமிய மதக்கடவுள் அல்லா உருவாக்கினார் என்றால் அவர் அதை பாதுகாப்பார், மேலும் அதை வளர்ச்சிபெற செய்வார். நாட்டின் வளர்ச்சிக்கு அவர் தான் காரணம்.

நவாஸ் ஷெரீப் ஆட்சிகாலத்தில் பாகிஸ்தான் வளர்ச்சிப்பாதையில் சென்றது. ஆனால், அதில் இருந்து தவறிவிட்டது. நாட்டின் பேரழிவை சந்தித்த கடந்த 5 ஆண்டுகளாக மக்கள் பார்த்தனர். அந்த 5 ஆண்டுகள் யார் ஆட்சி செய்தார்கள் என்பது அவர்களுக்கு தெரியும்.

ஷபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசின் குழு தேர்தலுக்கு முன் நாட்டின் பொருளாதார நிலைமையை முன்னேற்ற முயற்சிக்கிறது' என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com