ஈரான் எல்லையில் பயங்கரவாதிகள் தாக்குதல்: பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் 4 பேர் பலி

ஈரான் எல்லையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் 4 பேர் உயிரிழந்தனர்.
கராச்சி,
பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணம் ஈரான் எல்லையோரம் அமைந்துள்ளது. ஈரான் எல்லையோரம் அமைந்துள்ள அந்த மாகாணத்தின் கீச் மாவட்டம் ஜல்ஜி செக்டார் பகுதியில் பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, பாதுகாப்பு படையினரை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் 4 பேர் உயிரிழந்தனர். ஈரான் நாட்டில் இருந்து செயல்படும் பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக பாகிஸ்தான் பாதுகாப்பு படை குற்றஞ்சாட்டியுள்ளது.
Related Tags :
Next Story






