வரும் மாதங்களிலும் பணி நீக்கம் தொடரும் - கூகுள் சி.இ.ஓ. அறிவிப்பால் ஊழியர்கள் கலக்கம்


வரும் மாதங்களிலும் பணி நீக்கம் தொடரும் - கூகுள் சி.இ.ஓ. அறிவிப்பால் ஊழியர்கள் கலக்கம்
x

இந்த பணி நீக்கம் கடந்த ஆண்டின் அளவில் இருக்காது என கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.

வாஷிங்டன்,

சமீபத்திய பணிநீக்க நடவடிக்கையைத் தொடர்ந்து, நிறுவனத்தின் நடவடிக்கைகளை எளிமையாக்கும் வகையில் வரும் மாதங்களில் மேலும் பணிநீக்க நடவடிக்கைகள் இருக்கும் என்று கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை கூறியிருப்பதாக 'தி வெர்ஜ்' பத்திரிகை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சுந்தர் பிச்சை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில்,

இந்த பணிநீக்க நடவடிக்கைகள் நிறுவனத்தின் செயல்பாட்டை அதிகரிக்கும் வகையில் பல்வேறு துறைகளின் அடுக்குகளை நீக்குவதாக இருக்கும். இந்த பணி நீக்கம் கடந்த ஆண்டின் அளவில் இருக்காது. அதேபோல் எல்லா குழுக்களிலும் இரு்ககாது என்று தெரிவித்துள்ளார். கூகுள் அசிஸ்டண்ட் பிரிவில் பணிபுரியும் நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்பட்ட சில நாட்களுக்குள் இந்த அறிவிப்பு வந்துள்ளது. இந்த பணிநீக்க நடவடிக்கையில் கூகுள் நெஸ்ட், பிக்ஸல், பிட்பிட், விளம்பர விற்பனை பிரிவு போன்றவை அதிகமாக பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கூகுள் நிறுவனங்களில் கடந்தாண்டு சுமார் 12 ஆயிரம் பேர் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டும் பணிநீக்கம் செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டும் பனிநீக்க நடவடிக்கை தொடரும் என சி.இ.ஓ சுந்தர் பிச்சை கூறியுள்ளது ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஆண்டின் முதல் 10 நாளில் மட்டும் கூகுள் ஆல்பபெட் நிறுவனத்தில் இருந்து சுமார் ஆயிரம் பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


Next Story