கிரீசில் யூத உணவகம் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட பாகிஸ்தானியர்கள் கைது


கிரீசில் யூத உணவகம் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட பாகிஸ்தானியர்கள் கைது
x

Image Courtesy: AFP

கிரீஸ் நாட்டில் யூத உணவகம் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த பாகிஸ்தானியர்கள் மொசாட் உளவு அமைப்பின் உதவியுடன் கைது செய்யப்பட்டனர்.

ஏதேன்ஸ்,

கிரீஸ் நாட்டின் மத்திய ஏதேன்ஸ் பகுதியில் யூத மதத்தை சேர்ந்தவர்களின் உணவகம் உள்ளது. இந்த உணவகம் அருகே அவ்வப்போது யூத மத நிகழ்ச்சிகளும் நடைபெறும்.

இந்நிலையில், இந்த யூத உணவகம் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கிரீஸ் பாதுகாப்பு துறைக்கு இஸ்ரேலின் உளவு அமைப்பு மொசாட் தகவல் கொடுத்தது.

இதனை தொடர்ந்து விசாரணையை தீவிரப்படுத்திய கிரீஸ் போலீசார், யூத உணவகம் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த 2 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 2 பேரும் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்பதும் ஈரானிய பயங்கரவாத அமைப்பின் ஆதரவுடன் கிரீசில் உள்ள யூதர்களை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இஸ்ரேலின் மோசாட் உளவு அமைப்பின் உதவியுடன் கிரீஸ் போலீசார் யூத உணவகம் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த 2 பாகிஸ்தானியர்களை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.


Next Story