பாகிஸ்தான் பயங்கரவாதிக்கு எதிரான தீர்மானத்துக்கு முட்டுக்கட்டை ஏன்? சீனா விளக்கம்


பாகிஸ்தான் பயங்கரவாதிக்கு எதிரான தீர்மானத்துக்கு முட்டுக்கட்டை ஏன்? சீனா விளக்கம்
x

மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பாகிஸ்தான் பயங்கரவாதிக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்ற விடமால் சீனா முட்டுக்கட்டை போட்டது.

பீஜிங்,

மும்பையில், 2008ல் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட, பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் முக்கிய தளபதியான சஜித் மிர்ரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க, அமெரிக்கா மற்றும் இந்தியா சார்பில், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் சமீபத்தில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினரான சீனா, இந்த தீர்மானத்தை நிறைவேற்ற விடமால் முட்டுக்கட்டை போட்டது. இதற்கு முன்னரும் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்தியா கொண்டு வந்த தீர்மானங்களுக்கு இதே போல் சீனா முட்டுக்கட்டை போட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பாகிஸ்தான் பயங்கரவாதி சஜித் மிர்ருக்கு எதிரான தீர்மானத்தை தடுத்ததை சீனா நியாப்படுத்தியுள்ளது.

இதுபற்றி விளக்கம் அளித்த சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் மாவோ நிங், "விதிகள் மற்றும் நடைமுறைகளுக்கு இணங்க சீனா எப்போதும் ஆக்கபூர்வமான மற்றும் பொறுப்பான முறையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பணிகளில் பங்கேற்கிறது. அந்த வகையில் சஜித் மிர்ரின் தீர்மானத்தில் சீனாவின் நடவடிக்கைகள் தொடர்புடைய விதிகள் மற்றும் நடைமுறைகளுடன் ஒத்துப்போகின்றன" என கூறினார்.

1 More update

Next Story