அமெரிக்க கோர்ட்டில் நீதிபதியாக இந்திய பெண் நியமனம்


அமெரிக்க கோர்ட்டில் நீதிபதியாக இந்திய பெண் நியமனம்
x

அமெரிக்க கோர்ட்டில் நீதிபதியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாகாணத்தில் உள்ள அயர் மாவட்ட கோர்ட்டின் நீதிபதியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் தேஜல் மேத்தா நியமிக்கப்பட்டு உள்ளார்.

இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் அயர் மாவட்ட கோர்ட்டு நீதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்பு இவர் அயர் மாவட்ட கோர்ட்டின் இணை நீதிபதியாக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாவட்ட கோர்ட்டு தலைமை நீதிபதி ஸ்டேசி போர்டெஸ் தேஜல் மேத்தாவுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்றபோது, `ஒரு வக்கீலாக இருந்தால் குறிப்பிட்ட கட்டத்தில் மட்டுமே பொதுமக்களுக்கு உதவ முடியும். அதுவே நீதிபதியாக இருக்கும்போது பல்வேறு உதவிகளை செய்யலாம்' என மேத்தா கூறினார்.


Next Story