டுவிட்டரை தொடர்ந்து மெட்டா... பெருமளவு ஊழியர்களை இந்த வாரம் பணி நீக்கம் செய்ய திட்டம்

பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா இந்த வாரத்தில் பெருமளவு ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டுவிட்டரை தொடர்ந்து மெட்டா... பெருமளவு ஊழியர்களை இந்த வாரம் பணி நீக்கம் செய்ய திட்டம்
Published on

வாஷிங்டன்,

உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் உலகின் மிகவும் பிரபல சமூகவலைதள நிறுவனமான டுவிட்டரை சமீபத்தில் வாங்கினார். இதனையடுத்து, டுவிட்டரில் அதிரடி மாற்றங்கள் நடந்து வரும் நிலையில் உலகம் முழுவதும் தங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் சுமார் 7 ஆயிரத்து 500 ஊழியர்களில் 50 சதவிகித ஊழியர்களை பணியில் இருந்து நீக்கி கடந்த 5 ம் தேதி டுவிட்டர் நிறுவனம் அதிரடி அறிவிப்பு வெளியிட்டது. இதனால், டுவிட்டர் ஊழியர்கள் மிகுந்த அதிர்ச்சியடைந்தனர்.

இந்நிலையில், டுவிட்டரை தொடர்ந்து பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டாவும் ஊழியர்கள் குறைப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தங்கள் ஊழியர்களின் பெரும்பாலானோரை இந்த வாரத்தில் பணி நீக்கம் செய்ய மெட்டா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், மெட்டா நிறுவன ஊழியர்கள் மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளனர்.

டுவிட்டர் நிறுவனம் தங்கள் ஊழியர்களை சமீபத்தில் பணி நீக்கம் செய்த நிலையில் உலகின் மிகப்பெரிய மற்றொரு சமூகவலைதள நிறுவனமான பேஸ்புக்கின் தாய் நிறுவனம் மெட்டாவும் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com