"கரடி ரோமத்தில் வீரியம் மிக்க மருந்து" - மருத்துவ உலகில் புதிய புரட்சி


கரடி ரோமத்தில் வீரியம் மிக்க மருந்து - மருத்துவ உலகில் புதிய புரட்சி
x

சோம்பல் கரடிகளின் ரோமத்தில் வீரியமிக்க ஆண்டிபயாடிக் பாக்டீரியாக்கள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

சிலாத் எனப்படும் சோம்பல் கரடிகளின் ரோமத்தில் வீரியமிக்க ஆண்டிபயாடிக் பாக்டீரியாக்கள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த வகை கரடிகள் மத்திய அமெரிக்காவின் கோஸ்டா ரிகா கடற்பகுதிகளில் அதிகம் கானப்படுகிறது.

இந்த விலங்கின் ரோமத்தை அன்மையில் ஆராய்ச்சி செய்த ஆராய்ச்சியாளர்கள், அதில் அதீத நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட ஆண்டிபயாடிக்குகள் உற்பத்திசெய்யும் பாக்டீரியாக்களை ஆராய்ச்சியாளர்கள் உறுதிசெய்தனர்.

மருந்துகளுக்கு கட்டுப்படாத நுண்ணுயிர்களான சூப்பர்பக்ஸ், மருத்துவத்துறையில் மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் நிலையில், இந்த பாக்டீரியாக்கள் அதற்கு தீர்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, பென்சிலின் தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டது போல, சோம்பல் கரடியின் ரோமத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த பாக்டீரியாக்கள், மருத்துவ உலகில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story