உலகிலேயே ஆபத்தான நாடு பாகிஸ்தான்; அமெரிக்க அதிபர் ஜோ பைடன்


உலகிலேயே ஆபத்தான நாடு பாகிஸ்தான்;  அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
x
தினத்தந்தி 15 Oct 2022 1:51 PM IST (Updated: 15 Oct 2022 2:04 PM IST)
t-max-icont-min-icon

எந்த வித ஒற்றுமையும் இன்றி அணு ஆயுதங்களை வைத்திருக்கும் பாகிஸ்தான் தான் உலகின் மிக ஆபத்தான நாடுகளில் ஒன்றாகும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

எந்த வித ஒற்றுமையும் இன்றி அணு ஆயுதங்களை வைத்திருக்கும் பாகிஸ்தான் தான் உலகின் மிக ஆபத்தா நாடுகளில் ஒன்றாகும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்சில் ஜனநாயக கட்சியின் எம்.பிக்கள் பிரச்சார குழுவின் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார். அமெரிக்காவுக்கு கடும் சவால் அளித்து வரும் சீனாவையும் ரஷ்யாவையும் திட்டித் தீர்த்த ஜோ பைடன், பாகிஸ்தான் குறித்து பேசியதும் கவனம் பெற்றுள்ளது.

தனது உரையின் போது அமெரிக்காவின் வெளிநாட்டு கொள்கை குறித்து பேசிக்கொண்டு இருந்தார். அப்போதுதான் சீனா, ரஷ்யா, குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தி ஜோ பைடன் கருத்துகளை வெளியிட்டார். தனது பேச்சை முடிக்கும் போது பாகிஸ்தான் தான் உலகின் ஆபத்தான நாடுகளில் ஒன்று குறிப்பிட்டார்.

1 More update

Next Story