பாகிஸ்தான் நாடு முழுவதும் இன்று மின் தடை ; பொதுமக்கள் அவதி

பாகிஸ்தான் நாடு முழுவதும் இன்று மின் தடை ; பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 23 Jan 2023 12:03 PM IST (Updated: 23 Jan 2023 12:03 PM IST)
t-max-icont-min-icon

டிசம்பரில், பாகிஸ்தான் முழுவதும் உள்ள சந்தைகள் மற்றும் உணவகங்கள் இரவு 8 மணிக்குள் அவற்றின் ஷட்டர்களை இழுக்க உத்தரவிடப்பட்டது. திருமண மண்டபங்களும் இரவு 10 மணிக்குள் மூடப்படுகிறது.

இஸ்லாமாபாத்:

தேசிய மின்கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இன்று பாகிஸ்தான் நாடு தழுவிய மின் தடையை அனுபவித்து வருகிறது. கோடி கணக்கான மக்கள் மின்சாரம் இல்லாமல் உள்லனர் என்று எரிசக்தி அமைச்சகத்தின் அறிக்கை தெரிவித்து உள்ளது.

கராச்சி, லாகூர் மற்றும் இஸ்லாமாபாத் உட்பட அனைத்து முக்கிய நகரங்களிலும் மின்வெட்டால் பாதிப்பு ஏற்பட்டது. முழுமையாக மின்சாரம் வழங்க 12 மணி நேரம் ஆகும் என என மின்சாரதுறை மந்திரி தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதாரம் அந்நிய செலாவணி கையிருப்பு குறைவது உட்பட பல்வேறு பொருளாதார சவால்களை எதிர்கொண்டுள்ள நிலையில், எரிசக்தியை சேமிக்கும் திட்டத்தை பாகிஸ்தான் சமீபத்தில் அறிவித்தது.

டிசம்பரில், பாகிஸ்தான் முழுவதும் உள்ள சந்தைகள் மற்றும் உணவகங்கள் இரவு 8 மணிக்குள் அவற்றின் ஷட்டர்களை இழுக்க உத்தரவிடப்பட்டது. திருமண மண்டபங்களும் இரவு 10 மணிக்குள் மூடப்படுகிறது.

அக்டோபர் 2022 இல், கராச்சி மற்றும் லாகூர் போன்ற நகரங்கள் உட்பட நாட்டின் பெரிய பகுதிகளை கணிசமான அளவு மின்வெட்டு 12 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.

1 More update

Next Story