பாகிஸ்தான்: விமான படை தளம் மீது திடீர் தாக்குதல்; 3 பயங்கரவாதிகள் சுட்டு கொலை

விமான படை பயிற்சி தளத்தில், நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 3 விமானங்கள் சேதம் அடைந்தன.
பாகிஸ்தான்: விமான படை தளம் மீது திடீர் தாக்குதல்; 3 பயங்கரவாதிகள் சுட்டு கொலை
Published on

கராச்சி,

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அந்நாட்டின் விமான படை பயிற்சி தளம் ஒன்று உள்ளது. இந்த நிலையில், இன்று காலை பயங்கரவாதிகள் சிலர் திடீரென அந்த தளத்திற்குள் புகுந்து தாக்க தொடங்கினர்.

இதனால் உஷாரான ராணுவ வீரர்கள் பதிலடி கொடுத்தனர். இந்த சம்பவத்தில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மற்ற 3 பயங்கரவாதிகள் பிடிபட்டனர்.

எனினும், பயங்கரவாதிகளின் இந்த தாக்குதலில், விமான படை பயிற்சி தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 3 விமானங்கள் சேதம் அடைந்தன என அந்நாட்டு ராணுவம் தெரிவித்தது.

தொடர்ந்து, ஒரு விரிவான கூட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, அந்த பகுதியை தூய்மை செய்யும் பணிகள் நடந்தன. எந்த விலை கொடுத்தேனும் பயங்கரவாதத்தின் தீங்கை, நாட்டில் இருந்து நீக்கும் பணியில் பாகிஸ்தான் ஆயுத படைகள் தொடர்ந்து ஈடுபடும் என்று அந்நாட்டு ராணுவம் தெரிவித்து உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com