உக்ரைன் போர்: ரஷிய தாக்குதலில் 210 வீரர்கள் கொன்று குவிப்பு

உக்ரைன் போரில் ரஷிய ராணுவம் நடத்திய தாக்குதலில் 210 வீரர்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

மாஸ்கோ,

உக்ரைன் மீதான ரஷியாவின் போர் 14-வது மாதத்தில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில் தற்போது கிழக்கு உக்ரைனில் இரு தரப்புக்கும் இடையே தீவிரமான சண்டை நடந்து வருகிறது.

இந்த நிலையில் கிழக்கு டொனெட்ஸ்க் பிராந்தியத்தை நோக்கி முன்னேறி வந்த உக்ரைன் ராணுவ வீரர்களை குறிவைத்து கடந்த 24 மணி நேரத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 210 பேர் கொன்று குவிக்கப்பட்டதாக ரஷிய ராணுவம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த தாக்குதலில் துருக்கியிடம் இருந்து பெறப்பட்ட கவச வாகனங்கள் உள்பட உக்ரைனுக்கு ராணுவத்துக்கு சொந்தமான ஏராளமான ராணுவ தளவாடங்கள் நிர்மூலமாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இது குறித்து உக்ரைன் உடனடியாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com