பாலியல் புகார்: பாகிஸ்தான் தூதர் பணியில் இருந்து நீக்கம்


பாலியல் புகார்:  பாகிஸ்தான் தூதர் பணியில் இருந்து நீக்கம்
x

ஸ்பெயினில் பாகிஸ்தான் நாட்டு தூதருக்கு எதிரான பாலியல் புகாரை தொடர்ந்து அவர் தூதரக பதவியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார்.



லாகூர்,



ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் பாகிஸ்தான் நாட்டு மூத்த தூதர் மிர்ஜா சல்மான் பெய்க் என்பவர் மீது தூதரகத்தின் உள்ளூர் பணியாளர் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்து உள்ளார். மாட்ரிட் நகரில் உள்ள பாகிஸ்தான் தூதர் சுஜாத் ரத்தோரிடம், அந்த பணியாளர் புகார் அளித்து உள்ளார்.

இதனை தொடர்ந்து 2 நபர் கொண்ட குழு ஒன்றை பார்சிலோனா மற்றும் மாட்ரிட் நகருக்கு வெளியுறவு அமைச்சகம் அனுப்பி வைத்து உள்ளது. விசாரணை நிறைவில், அதன் அடிப்படையில் அதிகாரியை பதவியில் இருந்து நீக்கியதுடன், உடனடியாக இஸ்லாமாபாத்தில் உள்ள தலைமையத்திற்கு வரும்படி உத்தரவிடப்பட்டது.

அந்த பெண் அளித்த புகாரின்படி, பாகிஸ்தான் தூதர் சமூக ஊடகம் வழியே அந்த பணியாளருக்கு செய்திகளை அனுப்புவது வழக்கம். இதனையே பாலியல் புகாராக அவர் தெரிவித்து உள்ளார். இதனை தொடர்ந்து தூதர் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

1 More update

Next Story