பாகிஸ்தான் சோதனைச் சாவடியில் பயங்கரவாதிகள் தாக்குதல் - 7 ராணுவ வீரர்கள் பலி


பாகிஸ்தான் சோதனைச் சாவடியில் பயங்கரவாதிகள் தாக்குதல் - 7 ராணுவ வீரர்கள் பலி
x
தினத்தந்தி 17 March 2024 11:56 AM IST (Updated: 17 March 2024 11:57 AM IST)
t-max-icont-min-icon

பயங்கரவாதிகள் வெடிகுண்டு நிரப்பப்பட்ட வாகனத்தை சோதனைச்சாவடி மீது மோதி வெடிக்கச் செய்தனர்.

பாகிஸ்தானில் வடக்கு வஜிரிஸ்தானின் பழங்குடியினர் மாவட்டத்தில் உள்ள பாதுகாப்பு சோதனைச் சாவடியில் நேற்று பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். முதலில் சோதனைச் சாவடியை நோக்கி முன்னேறிய பயங்கரவாதிகள் மீது ராணுவ வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தி, அவர்களை முன்னேற விடாமல் தடுத்தனர்.

பின்னர், பயங்கரவாதிகள் வெடிகுண்டு நிரப்பப்பட்ட வாகனத்தை சோதனைச்சாவடி மீது மோதி வெடிக்கச் செய்தனர். தற்கொலை தாக்குதலும் நடத்தப்பட்டது. இதனால் சோதனைச்சாவடியின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. அதன்பின்னர் இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது.

பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 அதிகாரிகள் உள்ளிட்ட 7 வீரர்கள் உயிரிழந்தனர். துப்பாக்கி சண்டையில் 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். புதிதாக துவங்கப்பட்ட ஜெய்ஷ்-இ-பர்சன்-இ-முகமது என்ற அமைப்பு, இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.

1 More update

Next Story