பிலிப்பைன்சில் ராணுவ விமானம் வயலில் விழுந்து நொறுங்கியது - 2 விமானிகள் பலி


பிலிப்பைன்சில் ராணுவ விமானம் வயலில் விழுந்து நொறுங்கியது - 2 விமானிகள் பலி
x

பிலிப்பைன்சில் ராணுவ விமானம் வயலில் விழுந்து நொறுங்கிய விபத்தில் சிக்கி 2 விமானிகள் பலியாகினர்.

மணிலா,

பிலிப்பைன்ஸ் நாட்டின் விமானப்படைக்கு சொந்தமான 'மார்செட்டி எஸ்.எப். 260' ரக விமானம், அந்த நாட்டின் படான் மாகாணத்தில் உள்ள பிலார் நகரில் இருந்து வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்டு சென்றது. விமானத்தில் 2 விமானிகள் இருந்தனர்.

இந்த விமானம் பிலார் நகருக்கு மேலே பறந்துகொண்டிருந்தபோது திடீரென விமானிகளின் கட்டுப்பாட்டை இழந்தது. அதை தொடர்ந்து அங்குள்ள வயல்வெளியில் விமானம் விழுந்து நொறுங்கியது.

இந்த கோர விபத்தில் விமானிகள் 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. இது குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக பிலிப்பைன்ஸ் ராணுவம் தெரிவித்துள்ளது.


Next Story