ரஷியாவுக்கு ஆயுத வினியோகம்: ஈரான் தொழிலதிபர்களுக்கு இங்கிலாந்து தடை


ரஷியாவுக்கு ஆயுத வினியோகம்: ஈரான் தொழிலதிபர்களுக்கு இங்கிலாந்து தடை
x

ரஷியாவுக்கு ஆயுத வினியோகம் செய்ததாக ஈரான் தொழிலதிபர்களுக்கு இங்கிலாந்து தடை விதித்துள்ளது.

லண்டன்,

உக்ரைன் நாட்டின் மீது ரஷிய கடந்த 10 மாதங்களாக போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் உக்ரைனில் பல்வேறு நகரங்களை ரஷியா கைப்பற்றியுள்ளது. எனினும் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் வழங்கும் ஆயுத உதவியுடன் உக்ரைன் ராணுவம் ரஷிய படைகளை எதிர்த்து தொடர்ந்து சண்டையிட்டு வருகிறது.

இந்த சூழலில் சமீபகாலமாக உக்ரைன் நகரங்கள் மீது ரஷியா வெடிகுண்டு டிரோன்களை கொண்டு தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த டிரோன்களை ஈரான் ரஷியாவுக்கு வழங்கியதாக அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. ஆனால் ரஷியாவும், ஈரானும் இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்து வருகின்றன.

இந்த நிலையில் ரஷியாவுக்கு டிரோன்களை உற்பத்தி செய்து வழங்கிய ஈரான் நாட்டின் தொழிலதிபர்கள் 12 பேர் மீது இங்கிலாந்து பொருளாதார தடைகளை விதித்துள்ளது. அதேபோல் உக்ரைன் நகரங்களில் நடத்தப்படும் டிரோன் தாக்குதல்களை வழிநடத்தும் ரஷிய ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் 12 பேர் மீதும் பொருளாதார தடைகள் விதித்துள்ளன.


Next Story