பிளாஸ்டிக் கழிவுகளை ஆற்றில் வீசிய பாகிஸ்தான் நடிகைக்கு பார்வையாளர்கள் கடும் கண்டனம்!


பிளாஸ்டிக் கழிவுகளை ஆற்றில் வீசிய பாகிஸ்தான் நடிகைக்கு பார்வையாளர்கள் கடும் கண்டனம்!
x
தினத்தந்தி 15 Sep 2022 10:23 AM GMT (Updated: 2022-09-15T15:59:43+05:30)

பாகிஸ்தான் திரைப்பட நட்சத்திரம் ரேஷம் என்பவர் பிளாஸ்டிக் பொதியை ஆற்றில் வீசியுள்ளார்.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் நடிகை ஒருவர் பிளாஸ்டிக் கழிவுகளை ஆற்றில் வீசுவதைக் காட்டும் வீடியோ, இணையத்தில் வெளியாகி பார்வையாளர்களை கோபமடைய செய்துள்ளது.

பாகிஸ்தான் திரைப்பட நட்சத்திரம் ரேஷம் என்பவர் பிளாஸ்டிக் பொதியை ஆற்றில் வீசியுள்ளார். இதனால் சமூக ஊடகப் பயனர்கள் அவரைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

ரேஷம் தனது காரில் இருந்து இறங்குவதையும், இறைச்சிப் பொட்டலத்தை கிழித்து அதன் துண்டுகளை தண்ணீரில் வீசுவதையும் காட்சிகளில் காணலாம். அதன்பின் அந்த பிளாஸ்டிக் டப்பாவையும் ஆற்றில் தூக்கி எழ்றிந்தார்.

இந்த செயலை சிலர் படம்பிடித்து சமூக வலைதளஙகளில் வெளியிட்டனர்.

ஆற்று நீரில் உள்ள நீர்வாழ் விலங்குகளுக்கு உணவளிக்க தான் அங்கு வந்ததாக நடிகை கூறினார். மேலும் தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டார்.

பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பிரபல பாடகி மீஷா ஷாபியும், ரேஷமின் செயல்களைக் கண்டித்துள்ளார்.

பின்னர் இன்ஸ்டாகிராமில் மன்னிப்பு கேட்டார் அந்த நடிகை. அவர் கூறுகையில், 'நான் ஒரு மனிதன், தவறு செய்வது மனிதர்களின் இயல்பு' என்று கூறியுள்ளார்.

அவர் அனைவரிடமும் தன் செயலுக்கு மன்னிப்பு கேட்டார், அதே தவறை மீண்டும் செய்ய மாட்டேன் என்றும் உறுதியளித்தார். இந்த சம்பவத்திற்கான முழுப்பொறுப்பையும் தான் ஏற்றுக்கொண்டதாகவும் தெரிவித்தார்.


Next Story