"ரஷியாவை தோற்கடிக்கும் வரை உக்ரைனுக்கு உதவுவோம்" - இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரஸ்


ரஷியாவை தோற்கடிக்கும் வரை உக்ரைனுக்கு உதவுவோம் - இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரஸ்
x

உக்ரைனின் கைகள் மேலோங்கும் வரை தாங்கள் ஓய்வெடுக்கப்போவது இல்லை என லிஸ் டிரஸ் தெரிவித்துள்ளார்.

நியூயார்க்,

உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி 24-ம் தேதி தனது படைகளை அனுப்பி தாக்குதலை தொடங்கியது. தற்போது வரை நீடித்து வரும் இந்த போர் காரணமாக ஏராளமான உயிர்சேதம் ஏற்பட்டு, லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அதே சமயம் ரஷியாவின் தாக்குதலுக்கு உக்ரைன் பாதுகாப்பு படை தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. மேலும் இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் நேரடியாக போரில் பங்கெடுக்காவிட்டாலும், உக்ரைனுக்குத் தேவையான அனைத்து ராணுவ உதவிகளையும் செய்து வருகிறது. பொருளாதார ரீதியாகவும் ரஷியா மீது உலக நாடுகள் வரலாறு காணாத தடைகளை விதித்துள்ளன.

இந்த நிலையில் ரஷியாவை தோற்கடிக்கும் வரை உக்ரைனுக்கு தேவையான அனைத்து ராணுவ உதவிகளும் தொடர்ந்து வழங்கப்படும் என இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரஸ் உறுதியளித்துள்ளார். இது தொடர்பாக ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பேசிய அவர், உக்ரைனுக்கு எதிரான போரை தீவிரப்படுத்தும் நோக்கில் படைகளை திரட்ட ரஷிய அதிபர் புதின் உத்தரவிட்டுள்ள நிலையில், உக்ரைனின் கைகள் மேலோங்கும் வரை தாங்கள் ஓய்வெடுக்கப்போவது இல்லை என லிஸ் டிரஸ் தெரிவித்துள்ளார்.


Next Story