ரஷிய வீரர்கள் சரணடைய ஜெலன்ஸ்கி அறிவுறுத்தல்... 'சரணடைந்தால் 10 ஆண்டுகள் சிறை' - புதின் எச்சரிக்கை


ரஷிய வீரர்கள் சரணடைய ஜெலன்ஸ்கி அறிவுறுத்தல்... சரணடைந்தால் 10 ஆண்டுகள் சிறை - புதின் எச்சரிக்கை
x
தினத்தந்தி 25 Sept 2022 10:18 AM IST (Updated: 25 Sept 2022 10:48 AM IST)
t-max-icont-min-icon

சரணடையும் ரஷிய வீரர்கள் பொதுமக்களைப் போன்று நடத்தப்படுவார்கள் என ஜெலன்ஸ்கி உறுதியளித்துள்ளார்.

மாஸ்கோ,

உக்ரைன் மீதான தாக்குதல் தீவிரப்படுத்த ரஷியா முடிவு செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக ரஷிய ராணுவத்திற்கு படைகளை திரட்டும் பணியில் அந்நாட்டு அரசு ஈடுபட்டு வருகிறது. சுமார் 3 லட்சம் படை வீரர்களை திரட்ட ரஷிய ராணுவம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையில் உக்ரைனிடம் ரஷிய ராணுவ வீரர்கள் தானாக சரணடைந்தால், கடும் தண்டனை விதிக்கப்படும் என ரஷிய அதிபர் புதின் எச்சரித்துள்ளார். ரஷிய வீரர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட கட்டளைகளை பின்பற்றாவிட்டாலோ, சண்டையிட மறுத்தாலோ, தானாக சரணடைந்தாலோ அவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் சட்டத்திற்கு அதிபர் புதின் ஒப்புதல் அளித்துள்ளார்.

அதே சமயம் இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷிய வீரர்கள் சரணடைய வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். அவ்வாறு சரணடையும் ரஷிய வீரர்கள் பொதுமக்களைப் போன்று நடத்தப்படுவார்கள் என ரஷிய மொழியில் ஜெலன்ஸ்கி உறுதியளித்துள்ளார்.

1 More update

Next Story