கிரிக்கெட்

பஞ்சாப் கிங்சை வீழ்த்தி டெல்லி அணி 6-வது வெற்றி + "||" + Delhi beat Punjab Kings for 6th win

பஞ்சாப் கிங்சை வீழ்த்தி டெல்லி அணி 6-வது வெற்றி

பஞ்சாப் கிங்சை வீழ்த்தி டெல்லி அணி 6-வது வெற்றி
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பஞ்சாப் கிங்சை வீழ்த்தி டெல்லி அணி 6-வது வெற்றியை பெற்றதுடன் புள்ளி பட்டியலிலும் முதலிடத்தை பிடித்தது.
ஆமதாபாத், 

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றிரவு ஆமதாபாத்தில் அரங்கேறிய 29-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. பஞ்சாப் கேப்டன் லோகேஷ் ராகுல் உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதால் அவருக்கு பதிலாக மயங்க் அகர்வால் கேப்டன் பதவியை ஏற்றார். இதே போல் நிகோலஸ் பூரனுக்கு பதிலாக டேவிட் மலான் இடம் பெற்றார்.

‘டாஸ்’ ெஜயித்த டெல்லி கேப்டன் ரிஷாப் பண்ட் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட் செய்த பஞ்சாப் அணியில் மயங்க் அகர்வால் நிலைத்து நின்று ஆட இன்னொரு பக்கம் சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்தது. பிரப்சிம்ரன் சிங் 12 ரன்னிலும், கிறிஸ் கெய்ல் 13 ரன்னிலும், டேவிட் மலான் 26 ரன்னிலும், தீபக் ஹூடா ஒரு ரன்னிலும், ஷாருக்கான் 4 ரன்னிலும் வெளியேறினர்.

மயங்க் அகர்வால் 99 ரன்

இதற்கு மத்தியில் மயங்க் அகர்வால் சூப்பராக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார். ரபடா, இஷாந்த் ஷர்மாவின் ஓவர்களில் சிக்சர் அடித்த மயங்க் அகர்வால், வேகப்பந்து வீச்சாளர் அவேஷ்கான் வீசிய இறுதி ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் சாத்தினார். இதனால் பஞ்சாப் அணி 160 ரன்களை தாண்டி கவுரவமான நிலையை அடைந்தது.

20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 6 விக்கெட்டுக்கு 166 ரன்கள் சேர்த்தது. மயங்க் அகர்வால் 99 ரன்களுடனும் (58 பந்து, 8 பவுண்டரி, 4 சிக்சர்), ஹர்பிரீத் பிரார் 4 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். ஐ.பி.எல்.-ல் ஒரு வீரர் 99 ரன்னுடன் அவுட் ஆகாமல் இருப்பது இது 3-வது நிகழ்வாகும்.

டெல்லி தரப்பில் ரபடா 3 விக்கெட்டுகளும், அவேஷ்கான், அக்‌ஷர் பட்டேல் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

டெல்லி வெற்றி

அடுத்து களம் இறங்கிய டெல்லி அணி 17.4 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 167 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றியை ருசித்தது. ஷிகர் தவான் 69 ரன்களுடனும் (47 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்), ஹெட்மயர் 16 ரன்களுடனும் (4 பந்து, ஒரு பவுண்டரி, 2 சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தனர்.

முன்னதாக பிரித்வி ஷா 39 ரன்களும், ஸ்டீவன் சுமித் 24 ரன்களும், கேப்டன் ரிஷாப் பண்ட் 14 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

8-வது லீக்கில் ஆடிய டெல்லி அணிக்கு இது 6-வது வெற்றியாகும். அத்துடன் புள்ளிபட்டியலிலும் முதலிடத்துக்கு முன்னேறியது. பஞ்சாப் அணிக்கு 5-வது தோல்வியாகும்.

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் மேலும் 54 பேருக்கு கொரோனா
டெல்லியில் மேலும் 54 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. டெல்லி காற்று மாசு; 5 பேர் கொண்ட பணிக்குழு அமைப்பு - மத்திய அரசு தகவல்
டெல்லியில் காற்று மாசு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை கண்காணிக்க 5 பேர் கொண்ட பணிக்குழுவை அமைத்துள்ளதாக மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
3. பெரியவர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய அனுமதி... குழந்தைகள் பள்ளிக்கு வரவேண்டுமா? - சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
பெரியவர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய அனுமதிக்கப்பட்டுள்ளபோது குழந்தைகள் மட்டும் பள்ளிகளுக்கு வர கட்டாயப்படுத்தப்படுவதா? என டெல்லி அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு சரமாரி கேள்வி எழுப்பியுள்ளனர்.
4. டெல்லி காற்று மாசு: மத்திய, மாநில அரசுகளுக்கு 24 மணி நேரம் கெடு விதித்த சுப்ரீம் கோர்ட்டு
டெல்லியில் காற்று மாசுவை கட்டுப்படுத்துவது குறித்து உறுதியான செயல்திட்டத்தை 24 மணிநேரத்திற்குள் கொண்டு வர வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு கெடு விதித்துள்ளது.
5. டெல்லியில் நாளை முதல் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை..!!
டெல்லியில் நாளை முதல் மறு உத்தரவு வரும் வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.