ஆசிய கோப்பை; 39 ஆண்டுகால வரலாறு மாறுமா...?


ஆசிய கோப்பை; 39 ஆண்டுகால  வரலாறு மாறுமா...?
x
தினத்தந்தி 14 Sep 2023 5:07 AM GMT (Updated: 14 Sep 2023 5:59 AM GMT)

இறுதிப்போட்டியை முடிவு செய்யும் முக்கியமான ஆட்டத்தில் பாகிஸ்தான்-இலங்கை அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.

கொழும்பு,

16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்4 சுற்றில் பாகிஸ்தான், இலங்கையை துவம்சம் செய்த இந்தியா 9-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

இறுதி சுற்றை எட்டும் மற்றொரு அணி எது? என்பது இன்று தெரிந்து விடும். சூப்பர்4 சுற்றின் 5-வது லீக்கில் நடப்பு சாம்பியன் இலங்கையும், பாகிஸ்தானும் இன்று (வியாழக்கிழமை) மோதுகின்றன. இவ்விரு அணிகளும் இந்தியாவுக்கு எதிராக தோற்றும், வங்காளதேசத்தை வீழ்த்தியும் தலா 2 புள்ளியுடன் சமநிலையில் உள்ளன. எனவே இதில் வெற்றி காணும் அணி சிக்கலின்றி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.

வரலாறு மாறுமா...

'39 ஆண்டுகால ஆசிய கிரிக்கெட் வரலாற்றில் இறுதிப்போட்டியில் இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரு போதும் சந்தித்ததில்லை. இன்றைய ஆட்டத்தில் இலங்கையை பாகிஸ்தான் வீழ்த்தினால், முதல் முறையாக மகுடத்துக்கு இந்தியாவும், பாகிஸ்தானும் மோதும்''. எனவே இந்த ஆட்டம் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது.


Next Story