இந்தியா - நியூசிலாந்து அரையிறுதி ஆட்டத்தை நேரில் காணவரும் கால்பந்து ஜாம்பவான்...வெளியான தகவல்...!


இந்தியா - நியூசிலாந்து அரையிறுதி ஆட்டத்தை நேரில் காணவரும் கால்பந்து ஜாம்பவான்...வெளியான தகவல்...!
x

image courtesy; AFP

உலகக்கோப்பை தொடரின் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் விளையாட உள்ளன.

மும்பை,

இந்தியாவில் நடைபெற்று வரும் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இந்த தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

நாளை மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் புள்ளிப்பட்டியலில் முதல் இடம் பிடித்த இந்திய அணியும், 4வது இடம் பிடித்த நியூசிலாந்து அணியும் மோத உள்ளன.

லீக் சுற்றில் தோல்வியே சந்திக்காத இந்திய அணி நாளை நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் முனைப்பில் உள்ளது. அதேபோல் லீக் சுற்றில் இந்தியாவிடம் தோல்வி கண்ட நியூசிலாந்து அணி இந்திய அணியை வீழ்த்தி தொடர்ந்து 3வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும் முனைப்பில் உள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்திடம் தோல்வி கண்டு வெளியேறிய இந்திய அணி இந்த முறை அதற்கு பழிதீர்க்கும் முனைப்புடன் உள்ளது. இதனால் நாளை நடைபெறும் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

இந்நிலையில் இந்த அரையிறுதி ஆட்டத்தை நேரில் காண இங்கிலாந்து கால்பந்து ஜாம்பவான் டேவிட் பெக்காம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினுடன் டேவிட் பெக்காமும் சேர்ந்து அரையிறுதி ஆட்டத்தை நேரில் காண உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெக்காம் யுனிசெப் அமைப்பின் நல்லெண்ண தூதராக இந்தியாவிற்கு 3 நாள் சுற்றுப்பயணம் மெற்கொண்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) யுனிசெப் உடன் இணைந்து பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு அதிகாரம் அளிப்பது குறித்து, கிரிக்கெட் விளையாட்டின் மூலம் பாலின சமத்துவத்தை மேம்படுத்துகிறது.

மேலும் பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், திரையுலக பிரபலங்கள் மற்றும் விளையாட்டு நட்சத்திரங்கள் இந்த ஆட்டத்தை நேரில் காண வாய்ப்புள்ளது.


Next Story