விராட் கோலிக்கு மெழுகு சிலை வைக்கும் ஜெய்ப்பூர் அருங்காட்சியகம்

image courtesy: PTI
உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு ஜெய்ப்பூரில் உள்ள அருங்காட்சியகத்தில் விராட் கோலியின் மெழுகு சிலை நிறுவப்பட உள்ளது
ஜெய்ப்பூர்,
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி. இவர் நவீன கிரிக்கெட்டின் ஜாம்பவான் பேட்ஸ்மேனாக போற்றப்படுகிறார். கிரிக்கெட்டில் ஏராளமான சாதனைகள் படைத்து வரும் இவர் பல இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கு முன்னுதாரணமாக உள்ளார். களத்தில் இவர் காட்டும் ஆக்ரோஷத்தின் மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
இந்நிலையில் இவரது புகழை சிறப்பிக்கும் விதமாக உலக பாரம்பரிய தினத்தை (ஏப்ரல் 18) முன்னிட்டு மெழுகால் ஆன விராட் கோலியின் முழு உருவ சிலையை நிறுவவுள்ளதாக ஜெய்ப்பூர் அருங்காட்சியகம் அறிவித்துள்ளது.
விராட் கோலியின் உருவ சிலையை நிறுவ குழந்தைகளும் இளைஞர்களும் கோரிக்கை வைத்து வந்த நிலையில், 35 கிலோ எடையில் 5.9 அடி உயரத்தில் இந்த சிலை உருவாக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story






