என்னை 10 ஆண்டுகள் சிறையில் அடைக்க பாக். ராணுவம் திட்டம் - இம்ரான்கான்


என்னை 10 ஆண்டுகள் சிறையில் அடைக்க பாக். ராணுவம் திட்டம் - இம்ரான்கான்
x
தினத்தந்தி 15 May 2023 10:58 AM IST (Updated: 16 May 2023 5:58 AM IST)
t-max-icont-min-icon

தன்னை 10 ஆண்டுகள் சிறையில் அடைக்க பாகிஸ்தான் ராணுவம் திட்டமிட்டுள்ளதாக இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

லாகூர்,

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சப் கட்சி தலைவருமான இம்ரான்கான் மீது 120க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், தேசதுரோகம், ஊழல் உள்ளிட்ட வழக்குகளும் அடக்கம்.

இதனிடையே, ஊழல் வழக்கு தொடர்பாக லாகூர் கோர்ட்டில் ஆஜராக வந்த இம்ரான்கானை அந்நாட்டு பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். ஆனால், சுப்ரீம் கோர்ட்டு தலையிட்டதையடுத்து இம்ரான்கான் விடுதலை வழங்கப்பட்டது.

ஆனாலும், பல வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் இம்ரான்கான் தொடர்ந்து விசாரணைக்கு கோர்ட்டில் ஆஜராகி வருகிறார்.

இந்நிலையில், தேசதுரோக வழக்கில் தன்னை 10 ஆண்டுகள் சிறையில் அடைக்க ராணுவம் திட்டமிட்டுள்ளதாக இம்ரான்கான் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், கடைசி சொட்டு ரத்தம் உள்ளவரை போராடுவேன் என்று இம்ரான்கான் தெரிவித்துள்ளார். இதையடுத்து, இம்ரான்கானின் ஆதரவாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழ்நிலையால் பாகிஸ்தானில் அரசியல் குழப்பம் தொடர்ந்து நீடித்து வருகிறது.

1 More update

Next Story