இந்திய அணியின் நட்சத்திர வீரராக அவர் திகழ்வார் - லக்னோ வீரரை பாராட்டிய ரஷீத் கான்

லக்னோ அணியின் இளம் சுழற்பந்துவீச்சாளருக்கு ரஷீத் கான் பாராட்டு தெரிவித்துள்ளார்.
Image Courtesy : IPL / BCCI 
Image Courtesy : IPL / BCCI 
Published on

அகமதாபாத்,

ஐபிஎல் இறுதி போட்டியில் குஜராத் - ராஜஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. குஜராத் அணி இறுதி போட்டியை எட்டுவதற்கு முக்கிய காரணமாக இருந்த வீரர்களுள் சுழற்பந்துவீச்சாளர் ரஷீத் கானும் ஒருவர் . இந்த சீசனில் அவர் சென்னை அணிக்கு எதிராக பேட்டிங்கிலும் சிறப்பான பங்களிப்பை அளித்து அணியை வெற்றி பெற செய்தார்.

இந்த நிலையில் லக்னோ அணியின் இளம் சுழற்பந்துவீச்சாளர் ரவி பிஷ்னாய்-க்கு ரஷீத் கான் பாராட்டு தெரிவித்துள்ளார். பிஷ்னாய் குறித்து ரஷீத் கான் கூறுகையில், " பிஷ்னாய் திறமை வாய்ந்த இளம் வீரர். நான் அவருடன் பலமுறை பேசியிருக்கிறேன். வரும் ஆண்டுகளில் அவர் இந்திய கிரிக்கெட் அணியின் பெரிய நட்சத்திரமாக இருப்பார். அவர் தனது திறமையை தொடர்ந்து நம்ப வேண்டும். அவ்வாறு அவர் செய்தால் நிச்சயமாக இந்தியாவுக்கு ஒரு பெரிய பந்துவீச்சாளராக இருப்பார்" என ரஷீத் தெரிவித்தார்.

இந்த ஐபிஎல் சீசனில் லக்னோ அணிக்காக விளையாடிய ரவி பிஷ்னாய் 14 போட்டிகளில் 13 விக்கெட்களை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com