ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது சம்பளத்தை நன்கொடையாக வழங்கும் ரஷித் கான்!

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, உலகக்கோப்பை தொடரில் தனக்கு கிடைக்கும் சம்பளம் முழுவதையும் நன்கொடையாக வழங்குவதாக ரஷித் கான் அறிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது சம்பளத்தை நன்கொடையாக வழங்கும் ரஷித் கான்!
Published on

காபூல்,

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர். மேலும் ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில், உலகக்கோப்பை தொடரில் தனக்கு கிடைக்கும் சம்பளம் முழுவதையும் நன்கொடையாக வழங்கவுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வீரர் ரஷித் கான் அறிவித்துள்ளார்.

இதுதெடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது: ஆப்கானிஸ்தானின் மேற்கு மாகாணங்களில் (ஹெரத், பரா மற்றும் பத்கிஸ்)  நிலநடுக்கத்தினால் ஏற்பட்டுள்ள துயர சம்பவத்தை அறிந்து மிகவும் வருத்தமடைகிறேன். இதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் உலகக்கேப்பை தொடரில் எனக்கு கிடைக்கும் முழு சம்பளத்தையும் நன்கெடையாக வழங்குகிறேன். மேலும் விரைவில் நிதி திரட்டுவதற்கான நடவடிக்கையிலும் ஈடுபட உள்ளேன்'' என தெரிவித்துள்ளார். ரஷித் கானின் இந்த அறிவிப்பிற்கு ரசிகர்கள் அனைவரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com