விராட் கோலிக்கு அபராதம்..!
பெங்களூரு அணி வீரர் விராட் கோலிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு,
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 ரன் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை தோற்கடித்தது.
இந்த ஆட்டத்தில் பேட்டிங்கில் விசுவரூபம் எடுத்த சென்னை வீரர் ஷிவம் துபே 27 பந்தில் 52 ரன்கள் எடுத்த நிலையில் 17-வது ஓவரில் ஆட்டமிழந்தார். பர்னெல் வீசிய பந்தை சிக்சருக்கு தூக்கியடிக்க முயன்ற போது, எல்லைக்கோடு அருகே நின்ற முகமது சிராஜ் பிரமாதமாக கேட்ச் செய்தார்.
துபே அவுட் ஆனதை கொண்டாடும் விதமாக பெங்களூரு வீரர் விராட் கோலி தரையை நோக்கி ஓங்கி குத்தியபடி ஆக்ரோஷமாக கத்தினார். இது வீரர்களின் நடத்தை விதியை மீறிய செயல் என்பது தெரிய வந்ததால் கோலிக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 10 சதவீதத்தை அபராதமாக போட்டி நடுவர் விதித்தார்.
Related Tags :
Next Story