நாங்கள் ஓரளவு சிறப்பாகவே செயல்பட்டோம் ஆனால்... - இந்தியாவுக்கு எதிரான தோல்வி குறித்து டாம் லாதம் கருத்து


நாங்கள் ஓரளவு சிறப்பாகவே செயல்பட்டோம் ஆனால்... - இந்தியாவுக்கு எதிரான தோல்வி குறித்து டாம் லாதம் கருத்து
x

Image Courtesy: AFP

உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைப்பெற்ற ஆட்டத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது.

தர்மசாலா,

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைப்பெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைப்பெற்ற ஆட்டத்தில் இந்திய அணி நியூசிலாந்தை தர்மசாலாவில் சந்தித்தது.

இந்த ஆட்டத்தில் விராட் கோலியின் அருமையான ஆட்டத்தால் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 10 புள்ளிகளுடன் இந்திய அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. இந்நிலையில் இந்த தோல்விக்கு பின்னர் நியூசிலாந்து பொறுப்பு கேப்டன் டாம் லாதம் பேசியதாவது,

நாங்கள் ஓரளவு சிறப்பாகவே செயல்பட்டோம். இருப்பினும் நல்ல தொடக்கத்தை கடைசி 10 ஓவர்களில் சரியாக பயன்படுத்தவில்லை. அங்கே நாங்கள் சொதப்பி விட்டோம். இந்தியாவுக்கு அதற்கான பாராட்டுக்கள்.

ரச்சின் – மிட்சேல் ஆகியோர் பார்ட்னர்ஷிப் போட்டு கடைசி 10 ஓவரில் அதிரடி காட்டுவதற்கான அடித்தளத்தை கொடுத்தனர். அந்த இடத்தில் அசத்துவதற்கான நல்ல அணியும் எங்களிடம் இருக்கிறது. குறிப்பாக மிட்சேல் சிறப்பாக விளையாடி கட்டுக்கோப்புடன் செயல்பட்டு எங்களின் இதர பேட்ஸ்மேன்களுக்கு உதவினார்.

மேலும் பந்து வீச்சில் நாங்கள் சரியாக செயல்படவில்லை. இருப்பினும் எங்களுடைய பவுலர்கள் முடிந்தளவுக்கு சிறப்பாக செயல்பட்டனர். விராட் கோலி சேசிங்கில் அபாரமாக செயல்படுகிறார். அவரை தடுத்து நிறுத்துவது கடினமாகும். அடுத்ததாக இதே மைதானத்தில் எங்களுக்கு ஒரு பகல் போட்டி இருக்கிறது. அதில் நாங்கள் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்த விரும்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story