உலகக்கோப்பை கிரிக்கெட்; பாகிஸ்தானுக்கு எதிராக டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு...!

இதுவரை நடந்து முடிந்த லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன.
Image Courtesy: @englandcricket
Image Courtesy: @englandcricket
Published on

கொல்கத்தா,

இந்தியாவில் நடைபெற்று வரும் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை நடந்து முடிந்த லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன.

மீதமுள்ள ஒரு அரையிறுதி இடத்திற்கு முன்னேற நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது. இதில் நியூசிலாந்து அணிக்கு அதிக வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெறும் 2வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் மோத உள்ளன.

இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி மிகப்பெரிய வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிக்கு செல்ல முடியும் என்ற இக்கட்டான சூழலில் விளையாட உள்ளது. அதேவேளையில் இதில் வெற்றி பெற்றால் எந்தவித சிக்கலும் இன்றி 2025ஆம் ஆண்டு நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தகுதிபெற முடியும் என்பதால் இங்கிலாந்து அணியும் வெற்றிக்காக போராடும்.

இந்நிலையில் இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. பாகிஸ்தான் அணி சேசிங் செய்ய உள்ளதால் அந்த அணியின் அரையிறுதி வாய்ப்பு முடிந்து விட்டது எனலாம். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com