உலகக்கோப்பை கிரிக்கெட்; தென் ஆப்பிரிக்காவின் வெற்றிப்பயணம் தொடருமா...? - நியூசிலாந்துடன் நாளை மோதல்...!

Image Courtesy: @ProteasMenCSA
10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் சிறப்பாக நடந்து வருகிறது.
புனே,
10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் சிறப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்த லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ளன.
இந்நிலையில் இந்த தொடரில் நாளை நடைபெறும் முக்கியமான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி நியூசிலாந்தை புனேவில் சந்திக்க உள்ளது. இரு அணிகளும் புள்ளிப்பட்டியலில் 2வது மற்றும் 3வது இடங்களில் உள்ளன.
நாளை நடைபெறும் ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி அரையிறுதி வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதிசெய்து விடும் என்பதால் இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும். இதனால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது.
Related Tags :
Next Story






