ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; கேரளா - பஞ்சாப் அணிகள் இன்று மோதல்


ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; கேரளா - பஞ்சாப் அணிகள் இன்று மோதல்
x
தினத்தந்தி 12 Feb 2024 6:09 AM GMT (Updated: 12 Feb 2024 6:26 AM GMT)

இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ள ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் - பஞ்சாப் எப்.சி. அணிகள் மோத உள்ளன.

திருவனந்தபுரம்,

12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு கொச்சியில் நடைபெற உள்ள ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் - பஞ்சாப் எப்.சி. அணிகள் மோத உள்ளன.

கேரளா அணி 13 போட்டிகளில் 8 வெற்றி , 2 டிரா , 3 தோல்வி என புள்ளி பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. பஞ்சாப் அணி 13 போட்டிகளில் 2 வெற்றி , 5 டிரா , 6 தோல்வி என புள்ளி பட்டியலில் 11வது இடத்தில் உள்ளது.


Next Story