தேசிய மகளிர் ஜூனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப்;உத்தரபிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் டெல்லி அணிகள் வெற்றி...!!


தேசிய மகளிர் ஜூனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப்;உத்தரபிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் டெல்லி அணிகள் வெற்றி...!!
x

image courtesy;ANI

13-வது தேசிய மகளிர் ஜூனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் தொடர் ஓடிசா மாநிலத்தில் உள்ள புகழ் பெற்ற பிஸ்ரா முண்டா ஹாக்கி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

ஒடிசா,

தேசிய மகளிர் ஜூனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் தொடரில் மொத்தம் 28 அணிகள் இடம் பெற்றுள்ளன.அவை 8 குழுக்களாக பிரிக்கப்பட்டு உள்ளன.லீக் ஆட்டங்களின் முடிவில் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு முன்னேறும்.இந்த தொடருக்கான லீக் ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

நேற்று நடந்த லீக் ஆட்டங்களில் முறையே உத்தரபிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் டெல்லி அணிகள் வெற்றிகளைப் பதிவு செய்தன.

நேற்று நடந்த முதல் ஆட்டத்தில் உத்தரபிரதேச அணி 18-0 என்ற கணக்கில் டாமன் & டையூ ஹாக்கி அணியை வீழ்த்தியது.இந்த போட்டியில் ஆரம்பம் முதலே உத்தரபிரதேச அணி முழுமையாக ஆதிக்கம் செலுத்தியது.இறுதி வரை ஆட்டம் முழுவதும் உத்தரபிரதேச அணி கையிலேயே இருந்தது.

இரண்டாவது ஆட்டத்தில் சத்தீஸ்கர் ஹாக்கி 19-0 என்ற கோல் கணக்கில் பீகார் அணியை வீழ்த்தியது.

மூன்றாவது ஆட்டத்தில் டெல்லி ஹாக்கி அணி 3-2 என்ற கோல் கணக்கில் கேரளா ஹாக்கியை வீழ்த்தியது. விறுவிறுப்பாக நடந்த ஆட்டத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது.கேரள அணிக்கு கிடைத்த 2 பெனால்டி வாய்ப்புகளை அந்த அணி கோலாக மாற்ற தவறியது.இதனால் கேரள அணி தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.


Next Story