பிற விளையாட்டு

பயிற்சியாளராக இந்திய குத்துச்சண்டை அணிக்கு திரும்புகிறார் சுரஞ்சோய் சிங் + "||" + Suranjoy singh to return to the Indian boxing team as coach

பயிற்சியாளராக இந்திய குத்துச்சண்டை அணிக்கு திரும்புகிறார் சுரஞ்சோய் சிங்

பயிற்சியாளராக இந்திய குத்துச்சண்டை அணிக்கு திரும்புகிறார் சுரஞ்சோய் சிங்
2009 ஆம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற ஆசிய குத்துசண்டை போட்டியில் தங்க பதக்கம் வென்ற இவர் 2010 ஆண்டு டெல்லியில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியிலும் தங்க பதக்கம் வென்றார்
டெல்லி 

இந்திய அணியின்  முன்னாள் குத்துச்சண்டை வீரர் சுரஞ்சோய் சிங். "லிட்டில் டைசன்" என்று ரசிகர்களால் அழைக்கப்படும் இவர் இந்தியாவின் சிறந்த குத்துசண்டை வீரராக விளங்கியவர் . தனது ஆக்ரோஷமான ஆட்டங்களால் பல போட்டிகளில் எதிர் அணி வீரர்களுக்கு தோல்வியை பரிசளித்தவர். 

2009 ஆம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற ஆசிய குத்துச்சண்டை போட்டியில் தங்க பதக்கம் வென்ற இவர் 2010 ஆண்டு டெல்லியில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியிலும்  தங்க பதக்கம் வென்றார்.தொடர் காயம் காரணமாக குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்பதில்  இருந்து 2015 ஆம் ஆண்டு இவர் ஓய்வு பெற்றார்.

35 வயதாகும்  சுரஞ்சோய் சிங் தற்போது பயிற்சியாளராக இந்திய குத்துச்சண்டை அணிக்கு திரும்ப இருக்கிறார். இவருடன் சேர்ந்து மொத்தம் 14 பயிற்சியாளர்கள் நியமிக்கபடவுள்ளனர்.

இந்த மாதம் 24 ஆம் தேதி சேர்பியாவில் தொடங்க இருக்கும் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிக்கு முன் இவர்கள் இந்திய அணியுடன் இணைய உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஜூனியர் துப்பாக்கிசுடுதல் சாம்பியன்ஷிப் : 43 பதக்கங்களுடன் முதல் இடம் பிடித்தது இந்தியா
இந்தியாவின் நட்சத்திர துப்பாக்கிசுடுதல் வீராங்கனை மனு பாக்கர் இந்த தொடரில் அதிகபட்சமாக 4 தங்கம் மற்றும் ஒரு வெண்கலம் என 5 பதக்கங்களை வென்று அசத்தினார்.
2. நிலக்கரி தட்டுப்பாடு: இந்தியாவில் பல மாநிலங்கள் இருளில் மூழ்கும் அபாயம்....!
நிலக்கரி பற்றாக்குறை காரணமாக பல்வேறு மாநிலங்களிலும் மின் உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
3. ஆமதாபாத்தில் ஒலிம்பிக் போட்டியா? இந்திய ஒலிம்பிக் சங்கம் தகவல்
2036 -ம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்த இந்திய ஒலிம்பிக் சங்கம் முயற்சி செய்துவருகிறது.
4. சர்வதேச விருது: இந்திய ஹாக்கி வீரர்கள், வீராங்கனைகள் தேர்வு
ரசிகர்கள் மூலம் தேர்வு செய்து வழங்கப்படும் இந்த விருதுகளில் இந்த முறை அதிகபட்சமாக 3,00,000 பேர் வாக்களித்துள்ளனர்.
5. காமன்வெல்த் போட்டிகள் 2022 :விலகியது இந்தியா ஹாக்கி அணி
இங்கிலாந்து அணி இந்தியாவில் நடைபெறும் ஜூனியர் உலகக் கோப்பை தொடரை புறக்கணித்து நேற்று அறிவிப்பு வெளியிட்டது