ஆசிய அணிகள் ஸ்குவாஷ் போட்டி: பாகிஸ்தானிடம் வீழ்ந்த இந்தியா


ஆசிய அணிகள் ஸ்குவாஷ் போட்டி: பாகிஸ்தானிடம் வீழ்ந்த இந்தியா
x

கோப்புப்படம் 

பெண்கள் பிரிவில் இந்திய அணி தனது கடைசி லீக்கில் 0-3 என்ற கணக்கில் தென்கொரியாவிடம் தோற்று அரையிறுதி வாய்ப்பை இழந்தது.

டேலியன்,

22-வது ஆசிய அணிகள் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவில் உள்ள டேலியன் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் பிரிவில் நேற்று நடந்த காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் பாகிஸ்தானிடம் வீழ்ந்தது.

இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த வேலவன் செந்தில்குமார் தனது ஆட்டத்தில் வெற்றி கண்டார். மற்ற இந்திய வீரர்களான ராகுல் பாய்தா, சுரஜ் குமார் சந்த் ஆகியோர் தோல்வியை சந்தித்தனர். இதன் பெண்கள் பிரிவில் இந்திய அணி தனது கடைசி லீக்கில் 0-3 என்ற கணக்கில் தென்கொரியாவிடம் தோற்று அரையிறுதி வாய்ப்பை இழந்தது.

1 More update

Next Story