மகளிர் விடுதிக்குள் நுழைந்த போதை ஆசாமி

நெட்டப்பாக்கத்தில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் பெண்களுக்கான விடுதியில் மது போதையில் கழிவறைக்குள் நுழைந்த போதை ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.
மகளிர் விடுதிக்குள் நுழைந்த போதை ஆசாமி
Published on

வில்லியனூர்

நெட்டப்பாக்கத்தில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் பெண்களுக்கான விடுதி உள்ளது. இங்கு ஏராளமான பெண்கள் தங்கியுள்ளனர். நேற்று நள்ளிரவு அங்குள்ள கழிவறையில் இருந்து கதவு தட்டும் சத்தம் கேட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெண்கள், இதுபற்றி நிறுவனத்தின் மேலாளருக்கு செல்போனில் தகவல் தெரிவித்தனர். அவர் நெட்டப்பாக்கம் போலீசுக்கு தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து கழிவறையின் வெளிப்புற தாழ்ப்பாளை திறந்து பார்த்தனர். அப்போது போதை மயக்கத்தில் வாலிபர் ஒருவர் இருந்தார்.

அவரை பிடித்து விசாரித்தபோது, நெட்டப்பாக்கம் புதுநகரை சேர்ந்த கோவிந்தன் மகன் தினேஷ் (வயது 27) என்பதும், அளவுக்கு அதிகமாக மதுகுடித்துவிட்டு போதை மயக்கத்தில் இரவு நேரத்தில் பெண்கள் விடுதி கழிவறையில் நுழைந்துவிட்டதும், அவர் உள்ளே இருப்பது தெரியாமல், விடுதி பெண்கள் தாழ்ப்பாள் போட்டதும் தெரியவந்தது. இதையடுத்து தினேசை போலீசார் கைது செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com