நாட்டறம்பள்ளி அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றவர் ரெயிலில் அடிபட்டு சாவு

நாட்டறம்பள்ளி அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றவர் ரெயிலில் அடிபட்டு பரிதாபமாக இறந்தார்.
நாட்டறம்பள்ளி அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றவர் ரெயிலில் அடிபட்டு சாவு
Published on

ஜோலார்பேட்டை,

நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூர் ஏரிக்கோடி பகுதியை சேர்ந்தவர் திம்மராயன். இவரது மகன் முத்தப்பன் (வயது 45), நேற்று முன்தினம் பச்சூர் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்கும்பொழுது ஜோலார்பேட்டையில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com