சாராய கடை அருகே இறந்து கிடந்த வாலிபர்

பாகூர் சாராயக்கடை அருகே 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார்.
சாராய கடை அருகே இறந்து கிடந்த வாலிபர்
Published on

பாகூர்

பாகூர் அடுத்த ஆராய்ச்சிகுப்பம் சாராயக்கடை அருகே 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் பாகூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. சாராயம் குடித்ததால் இறந்தாரா? அல்லது யாரேனும் கொலை செய்து பிணத்தை வீசி விட்டு சென்றனரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com