கூடுதல் ஆக்சிஜன் பெற்று முறைகேடு: சேலத்தில் தனியார் ஆஸ்பத்திரியில் கொரோனா சிகிச்சைக்கு தடை-மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் நடவடிக்கை

சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கூடுதல் ஆக்சிஜன் பெற்று முறைகேடு செய்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து, அந்த ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தற்காலிகமாக தடை விதித்து மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் மலர்விழி வள்ளல் அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளார்.
கூடுதல் ஆக்சிஜன் பெற்று முறைகேடு: சேலத்தில் தனியார் ஆஸ்பத்திரியில் கொரோனா சிகிச்சைக்கு தடை-மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் நடவடிக்கை
Published on

சேலம்:

சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கூடுதல் ஆக்சிஜன் பெற்று முறைகேடு செய்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து, அந்த ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தற்காலிகமாக தடை விதித்து மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் மலர்விழி வள்ளல் அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளார்.

ஆக்சிஜன் தட்டுப்பாடு

தமிழகத்தில் கொரோனா வைரசின் 2-ம் அலை மிக தீவிரமாக உள்ளது. இதனால் சேலத்தில் தினமும் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. மேலும் பலர் உயிரிழந்து வருகின்றனர்.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு முக்கிய தேவையான ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகம் உள்ளது. இதை சரிசெய்ய மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

புகார்கள் வந்தன

இந்த நிலையில் ஒரு சில தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு அதிகமாக ஆக்சிஜன் தேவைப்படுவதாக கூறி அதை பெற்றுக்கொண்டு முறைகேடு செய்வதாக புகார்கள் வந்தன.

இதையடுத்து சேலம் மாவட்ட மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் மலர்விழி வள்ளல் தலைமையில் நேற்று சேலம் 5 ரோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் திடீரென்று சோதனை நடத்தினர்.

தற்காலிகமாக தடை

அப்போது அந்த ஆஸ்பத்திரியில் கொரோனா பாதித்து சிகிச்சை பெறுபவர்களின் தேவைக்கு அதிகமாக ஆக்சிஜன் பெற்று அதில் முறைகேடு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சம்பந்தப்பட்ட ஆஸ்பத்திரிக்கு தற்காலிகமாக தடை விதித்து அவர் உத்தரவிட்டார்.

இதுகுறித்து அவர் கூறும் போது, இதுபோன்ற ஆய்வுகள் தொடர்ந்து நடத்தப்படும். எனவே முறைகேடாக ஆக்சிஜன் பெறும் தனியார் ஆஸ்பத்திரிகள் மீது நடவடிக்கை கடுமையாக இருக்கும் என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com