ரஜினிகாந்த் படத்தில் சரவணன்

சரவணனும் ‘ஜெயிலர்’ படத்தில் இணைந்திருப்பது தெரிய வந்திருக்கிறது.
ரஜினிகாந்த் படத்தில் சரவணன்
Published on

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கி வரும் புதிய படம், 'ஜெயிலர்'. இது ரஜினிகாந்தின் 169-வது படமாகும். சமீபத்தில் படத்தில் ரஜினிகாந்தின் தோற்றம் வெளியாகி வைரலானது.

'ஜெயிலர்' படத்தில் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகன் உள்ளிட்டோர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது சரவணனும் இந்த படத்தில் இணைந்திருப்பது தெரிய வந்திருக்கிறது. படத்தில் அவர் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

சரவணன் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'கார்கி' படம் மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது. அதன் எதிரொலியாகவே அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com