நிவேதா தாமசை கவர்ந்த நடிகர்கள்

தமிழில் குருவி, ஜில்லா, பாபநாசம், தர்பார் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நிவேதா தாமஸ் இப்போது தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.
நிவேதா தாமசை கவர்ந்த நடிகர்கள்
Published on

நிவேதா தாமஸ் அளித்துள்ள பேட்டியில், எனக்கு மிகவும் பிடித்த படம் மரோசரித்ரா. அதை எத்தனை முறை பார்த்தேன் என்பது நினைவில்லை. கமல்ஹாசனுடன் போட்டிபோட்டு நடிப்பது என்பது எந்த கதாநாயகிக்கும் முடியாத விஷயம். நடிப்புக்கு கமல்ஹாசன் ஒரு அகராதி என்று சொல்லலாம்.

ஸ்டைலில் ரஜினிகாந்தை யாரும் மிஞ்ச முடியாது. நான் நடிகை ஸ்ரீதேவியின் தீவிர ரசிகை. தனு வெட்ஸ் மனு படம் பார்த்த பிறகு கங்கனாவின் ரசிகை ஆகி விட்டேன். பத்மாவத் படம் பார்த்து தீபிகாவின் நடிப்பிற்கு வாவ் என்று சொல்லாமல் இருக்க முடியாது.

சமீபத்தில் கங்குபாய் படம் பார்த்து அலியா பட் மீது காதலில் விழுந்தேன். இசை எனக்கு மிகவும் பிடிக்கும். ஏ.ஆர்.ரகுமான் பாடல்கள் என்றால் உயிர். நடிப்பு எனது முதல் தேர்வு இல்லை. சிறுவயதில் ஆசிரியையாக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். சினிமாவிற்கு வராமல் இருந்திருந்தால் நிச்சயமாக ஒரு பள்ளி ஆசிரியையாகி குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுத்து கொண்டு இருந்திருப்பேன் என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com